வெடுக்குநாறிமலை எதிரொலி ஆலய மாதிரியை வடிவமைத்த பாடசாலை மாணவர்கள்

தமிழர் பாரம்பரியங்கள் மீது பொலிஸாரின் அத்துமீறல் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் கட்டிட வடிவமைப்பினை கற்கலால் உருவாக்கி பதாதைகளை தொங்கவிட்டுள்ளனர்.

தமிழர்கள் மற்றும் சமய பாராம்பரியங்கள் மீது அரசின் அடக்குமுறைகளை வெளிப்படுத்தும் விதமாக வவுனியா கனகராயன் குள பாடசாலை மாணவர்களால் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய மாதிரி பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி தின நிகழ்வுகளை வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டபோது பொலிஸாரின் அடக்கு முறைகளுக்ளுக்குள் தமிழர் தாயகம் சிக்குண்டது.

தமிழர்கள் மீதான அடக்குமுறைகளின் எதிரொலியாகவே இந்நிகழ்வை பார்க்கமுடிகிறது.

இதேவேளை, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட எட்டு பேரும் தற்போது வரையில் விளக்குமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதானவர்களை பார்வையிட இன்றையதினம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரதம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டோரை வைத்தியசாலையில் அனுமதித்து சோதனையிட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு சிறைச்சாலை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

Recommended For You

About the Author: admin