ஜனாதிபதித் தேர்தலை குழப்ப உக்ரெய்ன் முயற்சி

ரஷ்யாவில் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலை குழும்பும் வகையில் உக்ரெய்ன் தாக்குதல் தொடுத்துவருவதாக ஜனாதிபதி விளடிமீர் புட்டின் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான இரண்டாம் நாள் வாக்குபதிவு இன்றைய தினம் இடம்பெற்றுவருகின்ற நிலையில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உக்ரெய்ன் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை ரஷ்ய எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரெய்ன் ஆளில்ல விமானம் மூலம் தாக்கல் நடத்தியிருந்தது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு மூன்று நாட்கள் இடம்பெறும்.அந்த வகையில் அடுத்த ஆறு வருட ஜனாதிபதி பதவிக்கு புட்டின் தெரிவு செய்யப்படுவார் என நம்பப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin