காசாவின் நகரமான ரஃபா மீது தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் அரசாங்கம் பாதுகாப்புத் தரப்பினருக்கு நேற்றைய தினம் அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்கும் வகையில் இன்னுமொரு தரப்பினரை கட்டாருக்கு இஸ்ரேல் அனுப்பிவைக்க திட்டமிட்டுள்ளது.
பேச்சுக்களில் பலஸ்தீனிய இராணுவ தரப்பான ஹமாஸினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின் விடுதலை குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
பிரதமர் பெஞ்சமீன் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பலஸ்தீனத்தின் தெற்கு பகுதியினை தாக்குதவற்கு பிரதமர் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஐந்து மாதங்களாக இடம்பெற்றுவரும் 2.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது