இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வ கொண்டாட்டத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று (12) கொண்டாடியது.

இந்நிகழ்வு இன்று காலை 09 மணிக்கு கொழும்பு தேசிய அருங்காட்சியக கேட்போர் கூடத்தில் ஆரம்பமான நிலையில் ‘பெண்கள் வலுவூட்டல் மூலம் பொருளாதார மாற்றம் – நெருக்கடிக்கு பதில்’ என்ற தொனிப்பொருளில் நிகழ்வு அமைந்திருந்தது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் , விரிவுரையாளர்கள் பெண்கள் தொடர்பான சில நடைமுறை சிக்கல்கள் குறித்து தங்கள் விரிவுரைகளை வழங்கினர்.

நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான பேராசிரியர் தையமுத்து தனராஜ், பேராசிரியர் பாத்திமா பர்ஸானா ஹனிபா, சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா, கலாநிதி கெஹான் குணதிலக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், மனித உரிமைகள் அதிகாரிகள், விசேட விருந்தினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin