ஹிஸ்புல்லாவின் கோட்டையை இலக்குவைத்தது இஸ்ரேல்

இஸ்ரேலிய போர் விமானங்கள் லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தாக்கியுள்ளதுடன், ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான தளங்களையும் அழித்துள்ளன.

இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பில் சிலர் கொள்ளப்பட்டிருக்கலாம் என லெபனானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய இலக்குகளை நோக்கி 100 இற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியதாக அறிவித்ததை அடுத்தே இஸ்ரேல் இந்த தாக்குதலை தொடுத்துள்ளது.

காசா – இஸ்ரேல் போர் ஆரம்பமான தினத்தில் ஹமாஸ் அமைப்பும் இவ்வாறு நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவியிருந்தது.

அதற்கு நிகரான ஒரு தாக்குதலையே ஹிஸ்புல்லா தொடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இஸ்ரேல் நபி சிட் கிராமத்தில் வான்வழித் தாக்குதலை தொடுத்து வருகிறது.

இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டுள்ள பகுதி லெபனான்-சிரிய எல்லைக்கு அருகில் உள்ள ஷியைட் இஸ்லாமியக் குழுவான ஹிஸ்புல்லாவின் கோட்டையாகும்.

2006 ஆம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே மிக மோசமான பகைமையைத் தூண்டியது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Recommended For You

About the Author: admin