இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் இராணுவத்தின் துணைத்தலைவர் மார்வன் இஸா கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பான தரவுகளை ஆராய்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு மேற்கொள்ளவிருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் சிக்கல்நிலையை எட்டியுள்ள நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதலை மேற்கொண்டுவருகின்றது.
உண்மையில் மார்வன் இஸா கொல்லப்பட்டிருப்பின் கடந்த ஐந்து மாத கால போரில் கொல்லப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் உயர்நிலை தலைவராக இவர் இருப்பார் என இஸ்ரேல் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவின் மேற்கு கரைப்பகுதி பாரிய அழிவுகளைச் சந்தித்துவருகின்றது. இதேவேளை பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வகையில் அமெரிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றது.