இலங்கையின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது

அதே நேரம் சில பொருட்களின் இறக்குமதி காரணமாக பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, கடந்த ஆண்டில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது எதிர்பார்த்த வருமானம் குறைந்துள்ளது. அதே சில பொருட்களை இறக்குமதி செய்யும் போது அதன் உத்தேச செலவை விடவும் அதிக தொகை செலவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாய மற்றும் ஆடை ஏற்றுமதி மூலம் கிடைக்க பெற்ற வருமானமானது 0.8% வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் ஏற்றுமதி வருமானமானது 971 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

2023ஆம் ஆண்டை பொறுத்த வரை முதல் இரு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் 978 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்திருந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் முதல் இருமாதங்களில் ஏற்றுமதி வருமானம் ஒப்பீட்டளவில் வீழ்ச்சியை கண்டுள்ளது.

Recommended For You

About the Author: admin