மற்றவர்களின் இன்ஸ்டாகிராம் ப்ரொபைலை ஸ்டோரியாக வைக்கலாம்!

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் தான் தற்போது அனைவரினதும் பொழுதுபோக்கு அம்சமாக விளங்குகிறது.

அதிலும் குறிப்பாக இன்ஸ்டாவில் பதிவிடப்படும் ரீல்ஸ்களை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் உள்ளது.

அதற்கேற்றாற்போல் இன்ஸ்டா தளமும் புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்கிறது.

அதனடிப்படையில், மற்றவர்களின் ப்ரொபைலை ஒருவர் தனது ஸ்டோரியில் வைக்கலாம் என்ற புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது, உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது பிரபலங்களின் ப்ரொபைலை அப்படியே உங்களது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக வைக்கலாம்.

மேலும் குறிப்பிட்ட அந்த நபரின் சமீபத்திய மூன்று பதிவுகளை ஸ்டோரியில் காண்பிக்கும்படியும் செய்யலாம்.

இந்த அம்சத்தினை வழமை போல Add to story ஆப்ஷனை பயன்படுத்தி வைக்கலாம்.

அதுமட்டுமில்லாமல் உங்களது ஸ்டோரியை பார்க்கும் நபர்கள் அந்த பயனரின் ப்ரொபைலை பார்ப்பதற்காக வியூவ் ப்ரோபைல் என்ற பட்டனும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 24 மணிநேரத்தில் மறைந்துவிடும். இந்த புதிய அம்சமானது அனைத்து பயனர்களுக்கும் பயன்பாட்டுக்கு வரும்.

Recommended For You

About the Author: admin