மேஷம்
எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மேம்படும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். உத்தியோகப் பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கும்.
ரிஷபம்
நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சிக்கனமாக செயல்பட்டுவீர்கள். வியாபாரப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
மிதுனம்
நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். கடன் விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கமிஷன் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்கவும். சக ஊழியர்களால் திருப்தி ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.
கடகம்
திட்டமிட்ட பணிகள் கைகூடிவரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும்.
சிம்மம்
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய சிக்கல்கள் விலகும். அலுவலகப் பணிகளில் துரிதம் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும்.
கன்னி
மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதாரம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது. சக ஊழியர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும்.
துலாம்
கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களால் பொறுப்புகள் மேம்படும்.
விருச்சிகம்
அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும்.
தனுசு
பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குழந்தைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். பணி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.
மகரம்
குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.
கும்பம்
மற்றவர்களை எதிர்பாராமல் இருப்பது நல்லது. எதிலும் பதற்றமின்றி செயல்படவும். சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். முதலீடு சார்ந்த செயல்பாடுகளை தவிர்க்கவும். கல்வி தொடர்பான பணிகளில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும்.
மீனம்
எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்.

