அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கேத்ரின் ஹோர்ஸ்ட்

ஜூலி சங்கிற்குப் பின்னர், இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக அமெரிக்க மூத்த இராஜதந்திரி எலிசபெத் கேத்ரின் ஹோர்ஸ்ட் ( Elizabeth Kathryn Horst) நியமிக்கப்படவுள்ளார்.

ஜூலி சங்கின் பதவிக் காலம் விரைவில் முடிவடைந்ததும், அவர் இலங்கைக்கான புதிய தூதுவராக தனது கடமைகளை பெறுப்பேற்ப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க செனட்டின் அனுமதிக்கு உட்பட்ட இந்த நியமனத்திற்கு இலங்கை அரசாங்கம் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.

ஹோர்ஸ்ட் தற்போது பாகிஸ்தானுக்குப் பொறுப்பான முதன்மை துணைச் செயலாளராகவும் துணைச் செயலாளராகவும் உள்ளார்.

அவர் அமெரிக்க தூதரக பெர்லினில் இருந்து வந்தார், அங்கு அவர் மிஷன் ஜெர்மனிக்கான பொது இராஜதந்திரத்திற்கான ஆலோசகராக இருந்தார்.

அவர் உக்ரேன், ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தின் கலாட்டில் உள்ள அமெரிக்க இராணுவ மாகாண மறுசீரமைப்பு குழு (PRT); ரஷ்யா துஷான்பே, தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் அமெரிக்க இராஜதந்திரியாக அவர் பணியாற்றியுள்ளார்.

ஜூலி சங்

ஜனாதிபதி ‍ஜோ பைடனால் பரிந்துரைக்கப்பட்டு, அமெரிக்க செனட் சபையினால் உறுதிப்படுத்தப்பட்ட தூதுவர் ஜூலி சங், 2022 பெப்ரவரி மாதம் முதல் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக பணியாற்றுகிறார்.

அமைச்சர்-ஆலோசகர் தரத்தினைக் கொண்ட சிரேஷ்ட வெளியுறவுச் சேவையில் தொழில்நிலை உறுப்பினரான தூதுவர் சங், இதற்கு முன்னர் இந்தோ – பசுபிக் மற்றும் மேற்கு அரைக்கோள பிராந்தியம் முழுவதும் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

jt

Recommended For You

About the Author: admin