எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு பின்னர் ஒரு நாள் கூட ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த நாட்டில் ஜனாதிபதியாக செயற்பட முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அனுர, ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்பது தொடர்பில் பல கருத்துக்கள் எழுந்த வண்ணமே உள்ளன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கு பின்னர் ஒரு நாள் கூட ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டில் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது.
ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் அவர் தனது ஜனாதிபதி பதவியை விட்டு 5ஆவது லேனில் உள்ள தனது வீட்டில் இருப்பார் எனக் கூறுகின்றேன்.
“ ஏமாற்றப்பட்ட பொது மக்கள் , துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ள பொது மக்கள், எதிர்ப்பார்புகளை இழந்த இளைஞர்களின் எதிர்காலம் , மருந்துகள் இல்லாத நோயாளர்கள் இவ்வாறான ஒரு நாடே தற்போது காணப்படுகிறது. இந்த நாட்டு மக்களை ஏமாற்ற உரிமை இல்லை.
அதனால் நாம் உங்களுக்கு உறுதியளிக்கிறோம் இந்த நாட்டு மக்களை மின்சார ரயிலில் ஏற்ற புதியதொரு சமுதாயத்தை ஆரம்பிக்க வேண்டும்.
பழைய இடத்திலிருந்து கேட்ட கேள்விகளை மீண்டும் எங்களிடம் கேட்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கிறோம்.
இது வெறுமனே தேர்தல் மட்டும் அல்ல . மாற்றமடையக்கூடிய ஒரு யுகத்தின் ஆரம்பம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.” என தெரிவித்துள்ளார்.