ஜே.வி.பி மீது குற்றம் சுமத்துகிறார் நாமல்

நாட்டில் இனரீதியான போராட்டம் ஏற்படக் காரணமானவர்கள் நாட்டின் அழிவிற்கு பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் “ ஜே.வி.பி தமது முயற்சியில் தோல்வியடைந்து விட்டது என்று புரிந்த பின்னர், ஆட்களை ஒன்றுக்கூட்டி மேடைகளில் ஏறி கத்துகின்றனர்.

இந்த நாட்டின் 75 ஆண்டு கால சாபம் பற்றி கூற வேண்டுமாயின், 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் சொத்துக்களுக்கு தீவைத்து, மக்களை கொன்று, 30 ஆண்டு கால போரை ஆரம்பித்தவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

அத்துடன் 1988-89 ஆம் ஆண்டுகளில் 60 ஆயிரம் இளைஞர்,யுவதிகளை கொலை செய்தவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

கடந்த போராட்டத்தின் போது வீடுகளுக்கு தீ மூட்டி,நாட்டின் பொருளாதாரத்தையும் சுற்றுலாத்துறையையும் வீழ்த்தியவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

வீடுகளை தீ வைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சித்து தோல்வியடைந்துள்ளது என்பதை புரிந்துக்கொண்டுள்ளதால், மக்களை ஒன்று திரட்டி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

இதன் காரணமாகவே ஜே.வி.பியின் தலைவர்கள் இந்தியாவுக்கு சென்றிருக்க வேண்டும் என நாமல் ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin