ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலைப் பிற்போட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது
இவ்வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு பத்து பில்லியன் ரூபா கடந்த வரவு-செலவுத்திட்டத்தின் போது ஒதுக்கப்பட்டது.
அதன் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடப்பட்டு, ஒக்டோபரில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில் எதிர்வரும் ஜூலை மாதமளவில் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
எனினும் கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள பத்து பில்லியன் ரூபாவைக் கொண்டு பொதுத் தேர்தலை நடத்தமுடியாது. அதற்கு மேலதிக தொகை தேவைப்படும்.
அவ்வாறான நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு மேலதிக நிதியைக் கோரி நீதிமன்றம் செல்லும் நிலையில், நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி தேர்தல்களைப் பிற்போடும் திட்டமொன்று குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது