2 போட்டிகளில் விளையாட இலங்கை வீரர் ஹசரங்கவுக்கு தடை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்படுவார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றியது. இதில் ஹசரங்க தொடர் நாயகன் விருதை பெற்றார்.

இந்த நிலையில், வனிந்து ஹசரங்க 2 போட்டிகளில் விளையாட தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

தம்புளையில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், தான் வீசிய பந்துக்கு NO BALL கொடுத்ததற்கு கள நடுவர் லிண்டன் ஹனிபல்லிடம் ஆவேசமாக பேசியதற்காக வனிந்து ஹசரங்கவுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பங்களாதேஷ் அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்படுவார்.

அத்துடன், ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin