சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் வெளிநாட்டு அரச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் மூலம் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து இரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சீன அரசின் ஆதரவு பெற்ற ஹேக்கிங் அமைப்பு ஒன்றின் முக்கிய ஆவணங்கள் கசிந்துள்ளன. அந்த ஆவணங்களில் பரபரப்பான விடயங்கள் வெளியாகியுள்ளன.
மென்பொருள் குறைப்பாடுகளை பயன்படுத்தும் ஹேக்கர்கள்
இந்த ஹேக்கர்கள் வெளிநாட்டு அரசுகள், நிறுவனங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
மைக்ரோசாப்ட், எப்பிள் மற்றும் கூகுள் மென்பொருள் அமைப்புகளில் உள்ள குறைபாடுகளை பயன்படுத்தி இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த வாரம் கிட்ஹப்பில் கசிந்த ஆவணங்கள் ஷாங்காய் சார்ந்த ஐசோன் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
நிறுவனம் சீன அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு மூன்றாம் தரப்பு ஹேக்கிங் சேவைகளை வழங்கி வருகிறது.
20 நாடுகளை இலக்கு வைத்த ஹேக்கர்கள்
மற்ற நாடுகளைப் பற்றிய முக்கியத் தகவல்களைச் சேகரிப்பதற்காக சைபர் தாக்குதல்களில் ஈடுபட சீன அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆவணங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து, தாய்வான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் என மொத்தம் 20 நாடுகளின் நிறுவனங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஹேக்கர்கள் தொடர்பான ஆவணங்கள் கசிந்ததற்கு யார் காரணம் என்பதை கண்டறியும் முயற்சியில் சீனபொலிஸார் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் ஜிகாபைட் குடிவரவு தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
ஹேக்கர்களிடம் இருந்து கசிந்த ஆவணங்கள் மூலம் வெளியாககட்டுரைகளில் வெளிவந்துள்ள விபரங்களுக்கு அமைய, இந்தியாவில் இருந்து 100 ஜிகாபைட் (ஜிபி) குடிவரவு தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
பல்வேறு நாடுகளில் உள்ள 80 இலக்குகளில் இருந்து ஹேக்கர்கள் தரவுகளை திருடியுள்ளனர்.
தென் கொரிய தொலைத்தொடர்பு வசதிகளை வழங்கும் நிறுவனத்தின் 3 டெராபைட் (TB) அழைப்பு பதிவுகள் திருடப்பட்டுள்ளன