நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்துக்கு முரண்

இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக அமையக் கூடாது என்று அமெரிக்காவின் துணைச் செயலாளர் எலிசபெத் எம்.ஆலன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் இராஜாங்க விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் எலிசபெத் ஆலன் (19) காலை கொழும்பில் ‘உலக ஊடகங்களின் செயற்பாடு மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்கம்’ எனும் தலைப்பில் விசேட உரையொன்றை ஆற்றினார் .

ஜனநாயக, அமைதியான, நீதியான சமூகத்தை ஸ்தாபிப்பதில் இலங்கை ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மற்றும் பணி பாராட்டுக்குரியது என்றும் எலிசபெத் எம்.ஆலன், என சுட்டிக்காட்டியுள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அமெரிக்காவில் கவலை இருப்பதாகவும், புதிய சட்டம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுதந்திரமான கருத்துரிமைக்கு தடையாக இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலிய ஹமாஸ் நெருக்கடி மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களால் பாலஸ்தீன பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உயிரிழந்தமை தொடர்பில், இதன் போது எலிசபெத் எம்.ஆலனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த எலிசபெத் ஆலன், இஸ்ரேலின் தாக்குதல்களால் பாலஸ்தீனப் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது குறித்து அமெரிக்கா மிகவும் கவலையடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அரசாங்கம் காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கும் என்றும், இஸ்ரேல் மற்றும் அரபு நாட்டு தலைவர்கள் ஒன்றிணைந்து நெருக்கடிக்கு தெளிவான தீர்வு காண வேண்டும் என்றும் எலிசபெத் எம்.ஆலன் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin