கடையொன்றில் விற்பனை செய்யப்பட்ட வெதுப்பக உணவுப் பொருளில் உயிரிழந்த பல்லி ஒன்று காணப்பட்ட சம்பவம் இப்பலோகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள ஒருவர் தேநீர் அருந்துவதற்காக கடையொன்றில் குறித்த உணவுப் பொருளை வாங்கியுள்ளார். இதன் போது அதில் பல்லி ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த உணவுப் பொருள் மனித பாவனைக்கு ஏற்றது அல்லவென கடைக்காரர், இப்பலோகம சுகாதார வைத்திய அதிகாரி மற்றும்பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
எவ்வாறாயினும், கடை உரிமையாளரின் குழுவொன்று குறித்த உணவுப் பொருளை வாங்கி, அது குறித்து முறைப்பாடு செய்தவர்கள் மீது (19) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இப்பலோகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யதுள்ளனர்.
மனித பாவனைக்கு பொருத்தமில்லாத உணவுகளை விற்பனை செய்தமை தொடர்பில் உணவு சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரதிவாதிகள் கெக்கிராவ மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பொலிஸாரிடம் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.