முல்லைத்தீவு – கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் குமாரசாமிபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒருடத்தினை அகழ்வு செய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தர்மபுரம் பொலீசார் நீதிமன்றில் மேற்கொண்ட வழக்கிற்கு அமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் குறித்த பகுதியினை அகழ்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
றெட்பான சந்திக்கு அருகில் காணப்படும் குறித்த பகுதியில் விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவின் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது, இந்த பகுதியில் பல தடவைகள் சட்டவிரோதமாக தோண்டும் முயற்சிகள் பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அது வெற்றியளிக்கதா நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் தோண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றம் இதற்கான கட்டளையினை கடந்த 16.02.2024 அன்று வழங்கியுள்ளது. இன்று மாலை 2.30 மணியளவில் நீதிபதி முன்னிலையில் பொலீசார், பிரதேச தலைவர்கள், கிராமசேவையாளர்கள், பிரதேச சபையினர், தொல்பொருள் திணைக்களத்தினர், உள்ளிட்ட அரச திணைக்களங்களின் பிரசன்னத்துடன் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.