2023 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் லண்டன் பேருந்துகள் சம்பந்தப்பட்ட விபத்துக்களில் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் அல்லது பலத்த காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் ஏறும் போது அல்லது சாலை போக்குவரத்து மோதல்களில் 63 பேர் கொல்லப்பட்டனர் அல்லது பலத்த காயமடைந்துள்ளனர் என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் டிசம்பர் ஒன்பதாம் திகதிக்கும் இடையில் இந்த விபத்துகள் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த அறிக்கையின்படி, இந்த காலகட்டத்தில் பேருந்துகள் பாதசாரிகள் மீது மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அவை அனைத்தும் நவம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளன.
இந்த காலாண்டில் லண்டன் முழுவதும் சாலை விபத்துகளில் 914 பேர் கொல்லப்பட்டனர் அல்லது பலத்த காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக, லண்டன் பேருந்துகள் சம்பந்தப்பட்ட பல சம்பவங்களில் மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டகப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்துகளை குறைப்பதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்