அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிக்கு அபராதம்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு நியூயோர்க்கில் நடந்த சிவில் மோசடி விசாரணைக்குப் பிறகு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வட்டியும் சேர்த்து, அவர் குறைந்தது 453.5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் டொனால்ட் டிரம்ப் நியூயோர்க்கில் வர்த்தகம் செய்ய மூன்று ஆண்டுகளுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் அவரது மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியர் ஆகியோரும் இரண்டு ஆண்டுகளுக்கு இதேபோன்ற தடைகளைப் பெற்றுள்ளனர்.

Recommended For You

About the Author: admin