நெருக்கடியான அரசியல் சூழலில் அமெரிக்க இராஜதந்திரி கொழும்பு வருகை

இலங்கைத் தீவின் தலைநகரில் அரசியல் நெருக்கடிகளும் பொருளாதார பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ள சூழலில் அமெரிக்காவின் பொது இராஜதந்திரத்துக்கான துணைத் செயலாளர் லிஸ் ஆலன் (Liz Allen) அடுத்த வாரம் வரவுள்ளார்.

இந்தியா மற்றும் ஜோர்டான் ஆகிய தெற்காசிய நாடுகளுக்குப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமையவுள்ளது.

கூட்டாண்மை மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்குமான நாட்டின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இந்த பயணங்கள் சுட்டிக்காட்டுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தப் பயணம் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் பொது இராஜதந்திர முயற்சிகளின் ஏற்பாட்டினை மையமாகக் கொண்டது.

கருத்து சுதந்திரத்தை வளர்ப்பது, பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை வளர்ப்பது போன்றவையும் இந்த பயணத்தின் ஒரு நோக்காகும்.

ஆலனின் வருகை பெப்ரவரி 12 முதல் பெப்ரவரி 22 வரை நீடிக்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் அவரது இலங்கைத் தீவுக்கான பயணம் குறித்த உத்தியோகப்பூர்வ திகதி உறுதியாக குறிப்பிடப்படவில்லை.

ஜோர்டான் பயணத்தை முடித்தவுடன், பொது இராஜதந்திரத்திற்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் லிஸ் ஆலன் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை பயணத்தின் போது அவர், அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்களுடன் சந்திப்பின‍ை மேற்கொண்டு கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் தொடர்பில் உரையாடவுள்ளார்.

மேலும், சமூக உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த பல சமய சமூகத்தின் பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார்.

இலங்கை சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, ஆலன் இந்தியாவிற்கு பயணம் செய்யவுள்ளார்.

Recommended For You

About the Author: admin