ரஷ்யாவிடமிருந்து உலக மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

உலகளாவிய ரீதியில் பல நாடுகளும் நிறுவனங்களும் புற்றுநோய் தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகின்றன.

2030 ஆம் ஆண்டுக்குள் 10,000 நோயாளிகளை தடுப்பூசிகள் சென்றடைவதை இலக்காகக் கொண்டு மருத்துவ பரிசோதனைகளை தொடங்குவதற்கு ஜேர்மனியை தளமாகக் கொண்ட BioNTech உடன் கடந்த ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டது.

மருந்து தயாரிப்பு நிறுவனங்களான மாடர்னா மற்றும் மெர்க் & கோ (Moderna and Merck & Co) ஆகியவை ஒரு சோதனை புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கி வருகின்றன.

புற்றுநோய் தடுப்பூசி ரஷ்யாவில் கண்டுப்பிடிப்பு

இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்ட ஒருவர் கொடிய தோல் புற்றுநோயில் இருந்து மீண்டும் வருவதுடன், அவர இறப்புக்கான வாய்ப்பை பாதியாக குறைத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உட்பட பல புற்றுநோய்களை ஏற்படுத்தும் மனித பாப்பிலோமா வைரஸ்களுக்கு (HPV) எதிராக தற்போது ஆறு உரிமம் பெற்ற தடுப்பூசிகள் உள்ளன.

அத்துடன், கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் ஹெபடைடிஸ் பி (HBV) க்கு எதிரான தடுப்பூசிகளும் உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றின் போது, ​​ரஷ்யா தனது சொந்த ஸ்புட்னிக் வீ தடுப்பூசியை கொவிட் வைரஸுக்கு எதிராக உருவாக்கி பல நாடுகளுக்கு விற்றது.

இந்த நிலையில், ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை (cancer vaccines) விரைவில் நோயாளிகளின் பாவனைக்கு கிடைக்கக்கூடியதாக உருவாக்கிவிடுவார்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார்.

எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்த மாஸ்கோ மன்றத்தில் பேசிய அவர்,

“புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை கண்டறிவதில் நாங்கள் மிக அருகில் வந்துவிட்டோம்.

விரைவில் அது தனிப்பட்ட சிகிச்சை முறைகளுக்காக திறம்பட பயன்படுத்தப்படும் என நான் நம்புகிறேன்.‘‘ எனவும் கூறினார்.

இந்த தடுப்பூசிகள் எந்த வகையான புற்றுநோயை குணமாக்கும் என்பதை புடின் குறிப்பிடவில்லை.

Recommended For You

About the Author: admin