தொடர்ச்சியாக கோவில்களை திறந்துவைக்கும் மோடி!

ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கட்டார் சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு டோஹா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு கூறுகிறார்..

“இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் நாடுகளுக்குச் செல்கிறேன். எனது இந்த பயணம் இவ்விரு நாடுகளுடன் இந்தியாவுக்கு இருக்கும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும். பிரதமராக பதவியேற்ற பின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏழாவது முறையாக செல்கிறேன்.

இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே உள்ள நட்புறவின் ஆழத்தை இது காட்டுகிறது. எனது சகோதரர் முகம்மது பின் ஜயாதை சந்திக்க இருக்கிறேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை திறந்து வைக்கும் கௌரவத்தைப் பெற இருக்கிறேன்.

அபுதாபியில் உள்ள இந்திய சமூகத்துடன் உரையாட உள்ளேன். கட்டார் அதிபர் தமிம் பின் ஹமாத்ஐ சந்திக்க உள்ளேன். தமிம் பின் ஹமாத் தலைமையில் கட்டார் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது“ என்று பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.

மேலும், இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்களையும் அவர் சந்தித்திருந்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதற்காக எட்டு முறை சென்றுள்ளார்?

கடந்த 10 வருடத்தில் அவரின் குறிப்பிடத்தக்க 7 பயணங்களும் பெயர் சொல்லும் அளவிலான மிகப்பெரிய நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது.

2015ஆம் ஆண்டு – திறந்தவெளி பொதுகூட்டம்

2018 ஆம் ஆண்டு – உலக அரசாங்க உச்சி மாநாடு

சமீபத்தில் இடம்பெற்ற கோப் 28 மாநாடு போன்றவை அதிகம் பேசப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் பெப்ரவரி 13,14 ஆகிய திகதிகளில் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார்.

2015இலிருந்து இது அவருக்கு 7ஆவது பயணம். கடந்த 8 மாதங்களில் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 3 முறை சென்றிருக்கின்றார்.

தற்போதைய பயணத்தில், அபுதாபியில் நடத்தப்பட்ட ‘அஹ்லான் மோடி’ என்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் உரையாற்றியுள்ளார். இங்கு வாழும் இந்திய சமூகத்தினர் இதை பெரிய நிகழ்வாக பார்க்கின்றனர்.

இந்த நிகழ்வில், கலந்து கொள்ள 60,000 பேர் பதிவு செய்ததாக அதன் ஒருங்கிணைப்பு குழுவினர் கூறியுள்ளனர்.

இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

g

இந்திய இளைஞர்களிடையேயான விசேட சந்திப்பு

தொடர்ந்து டெல்லி ஐஐடியின் அபுதாபி வளாகத்தின் முதலாவது பிரிவு மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அப்போது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு என்பது இரண்டு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைப்பதாக தெரிவித்தார்.

gj

சுவாமி நாராயணன் கோயில் மோடியால் திறந்து வைப்பு (BAPS Swaminarayan Sanstha)

இதனையடுத்து 27 ஏக்கரில் பரந்து விரிந்து ரூபாய் 800 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த BAPS (BAPS Swaminarayan Sanstha.) கோயில் நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த கோவிலில் மொத்தம் 7 கோபுரங்கள் உள்ளன.

இந்த கோபுரங்களில் ராமர், சிவன், ஜகன்னாதர், கிருஷ்ணர், கிருஷ்ணரின் மறு அவதாரமாகக் கருதப்படும் சுவாமி நாராயண், திருப்பதி பாலாஜி மற்றும் ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் உள்ளன.

அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கோவிலே அரபு உலகின் முதல் இந்து கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இதற்கு முன்னாலும் அரபு நாடுகளில் இந்து கோவில்கள் காணப்படுகின்றன.

பக்ரைன், ஓமனிலும் கோவில்கள் காணப்படுகின்றன. பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவில் ஒரு நூற்றாண்டு பழமையான கோவிலாகும்.

தற்போது மத்திய கிழக்கு நாடுகளை பொருத்தவரை இந்தியர்கள்களின் குடியேற்றம் அதிகரித்துள்ளது. மேலும் இந்தியர்கள் உலக நாடுகளால் விரும்பப்படும் பணியாளர்களாக தற்போது மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில், அங்கு பணியாளர்களாக இருப்பவர்களின், வருமானம் அந்நாட்டின் அந்நிய செலாவனிக்கு பெரும் பங்கு வகிக்கின்றது. இதனால் இந்தியா மற்றும் அபுதாபி போன்ற நாடுகள் இணைந்தே வளர்ச்சியடைய ஏதுவாகின்றது.

nf

மேலும், அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான கோயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் விருந்தோம்பல் உணர்வைக் காட்டுகிறதே தவிர அதில் எவ்வித அரவியல் பின்னணியும் இல்லை எனவும் விமர்சிக்கப்படுகின்றது.

அதனால்தான் இந்த கோவிலை அரசியல் வெற்றியாக பார்க்காமல், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக பார்க்க வேண்டும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

l;hi

Recommended For You

About the Author: admin