தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியினால் வேலைகளை இலகுவாக்க வேண்டும் என்ற நோக்கில் பல வசதிகள் வந்துவிட்டன.
அந்த வகையில் இந்த வசதிகளைக் கொண்டு பல மோசடிக்காரர்கள் தங்களது திட்டங்களை செயற்படுத்தி விடுகின்றனர்.
அந்த மோசடித் திட்டங்களுக்கு இலகுவான ஒரு வழியை அமைத்துக்கொடுத்து விட்டது இந்த QR கோடுகள்.
QR கோடுகள் மூலம் மக்களை ஏமாற்றுவதற்கு ஃபிஷிங் மோசடி என்று பெயர்.
ஃபிஷிங் மோசடி என்றால், நேர்மையான நிறுவனம் போல் காட்டிக்கொண்டு தனி நபர்களின் கடவுச்சொற்கள், கிரெடிட் கார்ட் நம்பர்கள் போன்றவற்றை திருடுவது.
ஃபிஷிங் மோசடி எவ்வாறு நடைபெறுகிறது?
நீங்கள் ஸ்கேன் செய்யப்போகும் QR கோடின் மீது போலியான ஒரு QR கோடு ஒட்டப்படலாம். அதனை நீங்கள் ஸ்கேன் செய்தததும் அது உங்களை மோசடி வெப்ஸைட்டுக்குள் அழைத்துச் செல்லும்.
எனவே சந்தேகத்துக்கிடமான நபர்களிடமிருந்து பெறக்கூடிய QR கோடுகளை ஒருபோதும் ஸ்கேன் செய்ய வேண்டாம்.
QR ஃபிஷிங் மோசடியில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
- உண்மையான QR கோடுகள் சரியான முறையில் அச்சிடப்பட்டிருக்கும். ஒருவேளை அது மங்கலாகவோ, தவறாகவோ, சேதமடைந்தோ காணப்பட்டால் அதனை ஸ்கேன் செய்ய வேண்டாம்.
- பரீட்சயமில்லாத QR கோடுகளை ஸ்கேன் செய்ய வேண்டாம்.
- ஸ்கேன் செய்யும் முன் லிங்கை ப்ரிவ்யூ செய்து பார்கக்கூடிய QR கோடு ரீடர் அப்ளிகேஷனை பயன்படுத்துங்கள்.
- பார்க்கிங் மீட்டர், ரெஸ்டாரண்ட் போன்ற பகுதிகளிலுள்ள QR கோடுகளில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதன் உண்மைத் தன்மையை சோதியுங்கள்.
எனவே QR கோடுகள் குறித்து விழிப்புடன் இருந்தால் இதுபோன்ற மோசடிகளிலிருந்து தப்பிக்கலாம்.