வயிற்றுக்கோளாறு : விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட பயணி

விமானம் புறப்படுவதற்குமுன் கழிவறையை அதிகமாகப் பயன்படுத்தியதாகக் கூறி, பெண் பயணி ஒருவர் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

மெக்சிகோவிலிருந்து கிளம்பிய வெஸ்ட்ஜெட் விமானத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஜோவனா சியூ என்ற அப்பயணி ‘எக்ஸ்’ வழியாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

”தனக்கு வயிற்றுக்கோளாறு இருந்ததால் பலமுறை கழிவறை செல்ல வேண்டியிருந்தது.

அதனால் பலமுறை கழிவறையை பயன்படுத்தினேன். அதனால் என்னை விமானத்தில் இருந்து வெளியேற்றினர்.

ஹோட்டலில் அறை பதிவுசெய்வதாகவோ அல்லது இன்னொரு விமானத்தில் பயணம் செய்ய வழிவகை செய்வதாகவோ விமான நிறுவனம் உறுதி அளிக்கவில்லை.

அவசரத்தில் தனது பணத்தையும் விமானத்திலேயே மறந்துவிட்டு வெளியேறினேன். ஹோட்டலுக்குச் செல்ல கூட கையில் பணம் இருக்கவில்லை.” எனக் கூறியுள்ளார் சியூ.

விமான நிலையப் பாதுகாவலர் ஒருவருடன் பேசியதைக் காணொளியாக சியூ பதிவுசெய்துள்ளார்.

அக்காணொளியை அழிக்காவிடில் மறுநாள் விமானத்திலும் ஏற முடியாது என்று வெஸ்ட்ஜெட் நிறுவன மேற்பார்வையாளர் ஒருவர் தம்மை மிரட்டியதாகவும் சியூ தெரிவித்தார்.

கடினமான நேரத்தில் வெஸ்ட்ஜெட்டிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காமையாலேயே சியூ, தமக்கு நேர்ந்த அனுபவத்தை இணையம் வழியாக இவ்வாறு பகிர்ந்துகொண்டார்.

இதனையடுத்து, அவரைத் தொடர்புகொண்ட வெஸ்ட்ஜெட், நிகழ்ந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டு, சியூவிற்கு உதவ அவரது கைப்பேசி எண்ணைப் பகிர்ந்துகொள்ளுமாறும் கேட்டுக்கோண்டது.

இதனிடையே, சியூவிற்கு நேர்ந்த அனுபவம் குறித்து இணையவாசிகள் பலரும் வெஸ்ட்ஜெட் நிறுவனத்தைச் சாடியுள்ளனர்.

வெஸ்ட்ஜெட், கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட விமான நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Oruvan

Recommended For You

About the Author: admin