கொவிட் தொற்று நோய்க்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த தொற்று நோய் காரணமாக பாரியளவான வணிகங்கள் மூடப்பட்டுள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் இரண்டு லட்சத்து அறுபத்து மூவாயிரம் வணிகங்கள் மூடப்பட்டுள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை கண்டறிவதற்கு, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கடந்த வருடம் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நிறுவன அளவிலான மதிப்பீட்டை மேற்கொண்டது.
இந்த ஆய்வில் நுண், சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.