கூகுளின் புதிய ‘Gemini AI’ தொழில்நுட்பம்

தற்போது எங்கு பார்த்தாலும் AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. தொழில்நுட்பத்தைக் கொண்டு இப்படியும் வசதிகளைக் கொண்டு வர முடியுமா? என்பதற்கு இந்த AI ஒரு உதாரணம் என்று கூறலாம்.

அந்த வகையில் தற்போது உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய இணைய நிறுவனமான கூகுள், AI தொழில்நுட்பத்தில் புதிய ட்ரெண்டை உருவாக்கி வருகிறது.

சாட்ஜிபிடிக்கு பின்னர் தனது AI தொழில்நுட்பத்தை Google Bard என அறிமுகப்படுத்தினாலும் அதன் அடுத்தகட்ட அப்டேட்களைக் கொண்டு வந்து தற்போது புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் Google bard AI என அறிமுகப்படுத்தப்பட்ட பெயரை தற்போது Gemini AI என மாற்றியுள்ளது. இதன் அடுத்தகட்ட அப்டேட்டான Gemini advancedசையும் கூகுள் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் புதிய அல்ட்ரா 1.0 எல்எல்எம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கூகுள் தனது Gemini AI மொடலை அறிமுகம் செய்தது. அதில் நனோ, ப்ரோ, அல்ட்ரா என மூன்று பதிப்புக்களை வெளியிட்டது.

Oruvan

Gemini AI

அதேபோல் கூகுள் நிறுவனமானது ஆண்ட்ராய்ட் மற்றும் IOS இரண்டிலும் புதிய ஜெமினி செயலியை கொண்டு வந்துள்ளது.

பயனர்கள் இந்த செயலியை தங்கள் தொலைபேசிகளில் பதிவிறக்கியதன் பின்னர், கூகுள் அஸிஸ்ட்டென்ட் உதவியுடன் ஜெமினியுடன் இணைக்கலாம். அது எப்படியென்றால், பவர் பட்டனை அழுத்தி, மூலையில் இருந்து ஸ்வைப் செய்து ‘OK Google’ என்று கூறுவதன் மூலம் பயனர்கள் அதனை அணுக முடியும்.

ஜெமினியுடன் ஜெமினி அட்வான்ஸ்டையும் கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் ஜெமினி அட்வான்ஸ்ஸை பயன்படுத்த வேண்டுமானால், பயனர்கள் சந்தா செலுத்த வேண்டும்.

அதேநேரம் Google One AIயின் பிரீமியம் திட்டத்தைப் பெற்றவர்கள் எந்த கட்டணமும் இல்லாமல் இரண்டு மாதங்களுக்கு ஜெமினி அட்வான்ஸ்ஸை பயன்படுத்த முடியும். பிரீமியம் AI திட்டம் Google One சேவையை அடிப்படையாகக் கொண்டது. அதன் இலவச சோதனைக் காலம் முடிந்ததன் பின்னர் பயனர்கள் மாதத்துக்கு சந்தா செலுத்த வேண்டும்.

Recommended For You

About the Author: admin