நாளை முதல் கோரப்படும் புதிய ‘அஸ்வெசும’ விண்ணப்பங்கள்

மேலும் 400,000 பயனாளிகளை தேர்வு செய்வதற்காக ‘அஸ்வெசும’ நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்துக்கான புதிய விண்ணப்பங்கள் கோருவது நாளை 10) தொடங்க உள்ளது.

பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில், பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சில நிபந்தனைகள் திருத்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் வயதான பிரஜைகளுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் 2024 ஜனவரி முதல் உயர்த்தப்பட உள்ளன.

‘அஸ்வெசும’ பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை இப்போது 1.7 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இந்த சலுகைகளை மொத்தம் 2 மில்லியன் மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Recommended For You

About the Author: admin