உலகில் மிகப்பெரிய பணக்கார நாடாக விளங்கும் லக்சம்பேர்க்: தனிநபர் வருமானம்

அமெரிக்காவே உலகில் மிகப்பெரிய பணக்கார நாடாக கருத்தப்பட்டாலும் அந்த நாட்டை விட பல செல்வந்த நாடுகள் உலகில் உள்ளன.

ஐரோப்பாவில் உள்ள லக்சம்பேர்க் நாடே உலகில் மிகப்பெரிய பணக்கார நாடு. இந்த நாட்டின் ஆண்டு தனிநபர் வருமானம் சுமார் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 426 அமெரிக்க டொலர்கள் ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது பொதுவாக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

ஆனால் இந்த தரத்தின் மூலம் செல்வந்த நநாடுகளை ஒப்பிட முடியாது. 2022 ஆம் ஆண்டில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, மக்களின் கொள்வனவு திறன் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ‘The Economist and Solstad, Sondre’ இன் தரவுகளின்படி உலகின் பணக்கார நாடுகள் வரிசையில் ஐரோப்பிய நாடான லக்சம்பேர்க் முதல் இடத்தில் உள்ளது.

2022 ஆம் ஆண்டில், இந்த நாட்டின் மொத்த தனிநபர் வருமானம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 426 டொலராக காணப்பட்டது.

அதேவேளை உற்பத்தித்திறன் அடிப்படையில், லக்சம்பேர்க் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன் நோர்வே முதலிடத்தில் உள்ளது.

உலகில் உள்ள முதல் 10 பணக்கார நாடுகளை எடுத்துக் கொண்டால், அவற்றில் 8 நாடுகளில் மக்கள் தொகை ஒரு மில்லியனுக்கும் குறைவாக உள்ளது.

தனிநபர் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகின் பணக்கார நாடாக விளங்கும் லக்சம்பேர்க் நாட்டின் மொத்த மக்கள் தொகை 6 லட்சத்து 60 ஆயிரம்.

அந்த நாட்டின் சாதகமான வரிக் கொள்கைகள் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன.

இந்த சிறிய நாட்டின் கணிசமான செல்வம் காரணமாக, அந்நாட்டு மக்கள் இலவச கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற வசதிகளை அனுபவித்து வருகின்றனர்.

iii

Recommended For You

About the Author: admin