முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி தற்போதைக்கு ஓரளவு இறுதி செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
பெரும்பாலும் இந்தக் கூட்டணி தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் நாட்களில் வௌிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது
அவ்வாறு ரணிலுக்கு ஆதரவளித்து, அவர் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், பிரதமர் பதவியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு வழங்க வேண்டும் இந்தக் கூட்டணி சார்பில் நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது