கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர்

கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் 15 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், புலம்பெயர்ந்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற 20 ஆண்டுகளுக்குள், வேறு நாடுகளுக்கோ அல்லது சொந்த நாட்டுக்கோ திரும்புவதாக ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

கனடாவின் புள்ளியியல் துறை, 1982 முதல் 2017 வரை கனடாவுக்கு புலம்பெயர்ந்தோரில் கனடாவிலிருந்து வெளியேறியோர் குறித்து மேற்கொண்ட ஆய்வொன்றின் முடிவுகளை வெளியிட்டது.

குறித்த ஆய்வில்,“ 1982க்கும் 2017க்கும் இடையில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தோரில் 5.1 சதவிகிதத்தினர், நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற 5 ஆண்டுகளுக்குள் கனடாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

வெகுகாலம் முன்பு புலம்பெயர்ந்தோரை விட, சமீபத்தில் புலம்பெயர்ந்தோரே, அதிகளவில் கனடாவை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது.

கனடாவுக்கு புலம்பெயர்ந்து மூன்று முதல் 7ஆண்டுகள் ஆன புலம்பெயர்ந்தோர்தான் சற்று அதிகம் வெளியேற விரும்புகின்றனர்.

புலம்பெயர்ந்தோர் கனடாவை விட்டு வெளியேறுவதற்கு, பொருளாதார அடிப்படையில் கனடாவுடன் ஒருங்கிணைந்து வாழ இயலாத நிலை, வெளிநாட்டுக் கல்விக்கு அங்கீகாரம் கிடைக்காதது, வீடு பற்றாக்குறை, அதிக வீட்டு வாடகையும், வீடு விலையும், வருவாய், விலைவாசி என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin