கிளிநொச்சியில் பொலிஸாருடன், அடிபிடி: சிறீதரன் எம்.பி மீது தாக்குதல்

கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது சிறீதரன் எம்.பி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளைஞர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது பொலிஸாருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.

இதன் போது பொலிஸாரின் பிடியில் இருந்த இளைஞரை மீட்க முற்பட்ட போது சிறீதரன் எம்.பி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin