கட்டுப்பாடற்ற வேகம் : வீதி விபத்துக்கள் அதிகரிப்பு

2024ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே நெடுஞ்சாலைகள் தொடர்பான வீதி விபத்துக்கள் தொடர்ந்த அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிவேகமாக வாகனம் செலுத்துவதே இதற்கு பிரதான காரணம் என தொற்றா நோய் தடுப்பு பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் கலாநிதி சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வாகனங்களை மெதுவாகவும் நிதானமாகவும் ஓட்டும்போது விபத்துகளை எதிர்கொள்ளும் நேரம் குறைகிறது. பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதே இந்த விபத்துகளுக்கு காரணம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

விபத்துக்களை தவிர்க்கும் வகையில் அனைவரும் அதில் கவனம் செலுத்த வேண்டுமென கலாநிதி சமித சிறிதுங்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் விபத்துக்கள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதில், நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றாததால் விபத்துகள் ஏற்படுகின்றன.

அந்த வீதிகளில் விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான விசேட வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு வரையிலான நெடுஞ்சாலைப் பகுதியில் மின் விளக்குகள் பொருத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin