இஸ்ரேல் – காசா இடையிலான போர் இடைவிடாது நான்கு மாதங்களாக தொடர்கிறது. காசாவில் வாழும் மக்கள் அன்றாடம் உணவுக்கும் சுகாதாரத் தேவைகளுக்கும் திண்டாடி வருகின்றனர்.
இஸ்ரேல் – காசா போர் அந்த பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. முழு உலகளாவிய பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படும் போராக மாறியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக, முக்கியத்துவம் வாய்ந்த சூயல் கால்வாயில் வா்த்தகப் போக்குவரத்து 42 சதவீதம் சரிந்துவிட்டதாக ஐ.நா.வின் வா்த்தகப் பிரிவான யுஎன்சிடிஏடி கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவா் ஜான் ஹாஃப்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சா்வதேச அரசியல் சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்களால் இதுபோல் கடல் வணிகம் பாதிக்கப்படுவதால், உணவுப் பொருள்களின் வலைகள் உலக அளவில் உயா்வடையும்“ என்று எச்சரித்தாா்.
செங்கடல் வழியான போக்குவரத்து கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளதால் பல கப்பல் நிறுவனங்கள் தமது கப்பல்களை தென்னாப்பிரிக்காவின் ஊடாக அனுப்புகின்றன.
இதனால் கப்பல் போக்குவரத்தக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இது எதிர்காலத்தில் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.