செங்கடலில் நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன. இத்தாக்குதல் தொடா்வது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் என ஐ.நா. பொதுச் சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் எச்சத்துள்ளர்.
ஐ.நா. பொதுச் சபையின் 78ஆவது அமா்வின் தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ், ஐந்து நாள் அரசு பயணமாக இந்தியாவுக்கு சென்றார்.
இந்நிலையில் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலே ஐ.நா. பொதுச் சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
‘செங்கடலில் தொடா்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன.
இத்தாக்குதல் தொடா்ந்தால் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கக் கூடும்.
செங்கடலில் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தொடங்கிய தாக்குதலுக்கு மூன்றாம் தரப்பினா் உதவுவதுபோலுள்ளது.
எனவே சூழல் மிகவும் மோசமாக மாறி வருகிறது.
அதேபோல் காஸா பிரச்னைக்கு அமைதி வழியே தீா்வு.
இஸ்ரேல்-பலஸ்தீனம் என இரண்டும் தனிநாடுகளாக செயல்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.