நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அமெரிக்கா கவலை: ஜூலி சுங் டுவிட்

சிவில் சமூகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட முக்கிய பங்குதாரர்களின் முக்கிய உள்ளீடுகளை உள்ளடக்காமல் நேற்று நிறைவேற்றப்பட்ட இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து தெரிவித்துள்ள அவர்,

“ஜனநாயக விழுமியங்களை ஆபத்தில் ஆழ்த்துவதுடன், தெளிவற்ற மற்றும் அதிகப்படியான கட்டுப்பாடுகள் கொண்ட சட்டங்கள் முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துள்ளது.

இது இலங்கைக்குத் தேவையான பொருளாதார வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்குமாறும், எந்தவொரு சட்டமும் அதன் மக்களின் குரல்களை கட்டுப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் இலங்கையை அமெரிக்கா வலியுறுத்துகிறது” என்று அவர் தனுது எக்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin