ஏன் அயோத்தி ராமர் கோவிலில் கல்லைத் தவிர, இரும்பு, உருக்கு என்று எதுவும் பயன்படுத்தவில்லை தெரியுமா?

இந்த தளர்வான மணல் முற்றிலும் அடித்தளத்திற்கு பொருத்தமற்றது. பிறகு இதை மேலும் ஆராய ஒரு குழுவை நாங்கள் நியமித்தோம். இதைத் தொடர்ந்து இந்த சிக்கலைப் தீர்ப்பதற்காக சிபிஆர்ஐ, தேசிய புவி இயற்பியல் ஆய்வு, ஐஐடி டெல்லி, குவாஹாத்தி, சென்னை, ரூர்க்கி மற்றும் பாம்பே மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ (எல்&டி) ஆகியவற்றின் நிபுணர்கள் நியமிக்கப்பட்டு இது குறித்து ஆராய்ச்சி செய்தனர்.

பிறகு அயோத்தி ராமர் கோயிலில் 6 ஏக்கர் நிலத்தில் இருந்து 14 மீட்டர் அளவிற்கு மணல் அள்ளப்பட்டது. அதன் பிறகு அஸ்திவாரத்தை வலிமையாக போடுவதற்காக அதற்கான பாறைகளை தயார் செய்ய காலி இடத்தில் ரோல்டு காம்பாக்ட் கான்கிரீட் எனப்படும் தனித்துவமான கான்கிரீட் 56 அடுக்குகளில் போடப்பட்டது. இது ஒரு வகையான கான்கிரீட்டாக இருந்தால் கூட இறுதியில் பாறையாக மாறக் கூடியது.

பிறகு இந்த வலிமையான கான்கிரீட் பாறையே அஸ்திவாரமாக போடப்பட்டது. நாகரா பாணி ஸ்டைல் ராமர் கோயில் நாகரா பாணி ஸ்டைலில் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாணி ஸ்டைலில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. வட இந்தியாவில் பொதுவாக மூன்று கட்டிடக்கலை பாணிகள் பின்பற்றப்படுகின்றன.

மூன்று கட்டிடக்கலை பாணிகளில் ஒன்று தான் இந்த நாகரா பாணி பாணியாகும். இந்த நாகர் பாணியில் கட்டப்பட்டுள்ள மற்ற கோயில்கள் கஜுராஹோ கோயில், சோம்நாத் கோயில் மற்றும் கோனார்க்கின் சூரியன் கோயில் ஆகியவை ஆகும்.

ராம் லல்லாவின் சிலை ஷாலிகிராம் கல்லால் ஆனது ராம் லல்லாவின் சிலையை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ஷாலிகிராம் கற்கள் கொண்டு வரப்பட்டன. இந்த ஷாலிகிராம் கற்களை செதுக்கி இந்த சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ராம் லல்லா 5 வயது குழந்தை வடிவில் காட்சி தருகிறார். அதே மாதிரி அயோத்தியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஷாலிகிராம் கற்கள் சுமார் ஆறு கோடி ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: admin