ரஷ்ய, பெல்கொரோட் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக நகர ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பில் தனது டெலிகிராமில் பதிவிட்ட அவர்,
விமானம் மக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்ததாகவும், விபத்து நடந்த இடம் இப்போது சுற்றி வளைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
65 உக்ரைன் கைதிகளுடன் பயணித்த ரஷ்ய விமானம் விபத்து
65 உக்ரைன் கைதிகளுடன் பரிமாற்றத்திற்காக கொண்டு செல்லப்பட்ட ரஷ்ய விமானப்படையின் IL-76 என்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் மேலதிகமாக ஆறு பணியாளர்கள் மற்றும் மூன்று உதவியாளர்களும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானம் ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை (24) தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
விமானத்தில் பயணித்தவர்களின் நிலை தொடர்பில் ரஷ்யா இதுவரை தெரிவிக்கவில்லை.
IL-76 விமானம்
ரஷ்ய IL-76 விமானம் என்பது பெரிய மற்றும் கனரக சரக்குகளை நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்ட ஒரு இராணுவ விமானமாகும்.
நான்கு டர்போஃபான் என்ஜின்கள் மற்றும் ஒரு விசாலமான சரக்கு பிடிப்பு பொருத்தப்பட்ட இது, 40 டன்களுக்கும் அதிகமான சரக்குகளை 3,600 முதல் 4,200 கிமீ தூரத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
மேலும் மணிக்கு 770-800 கிமீ வேகத்தில் பயணிக்கும், இது மிகப்பெரிய போக்குவரத்து விமானங்களில் ஒன்றாகும்.
IL-76 ரஷியன் விண்வெளிப் படைகளால் இராணுவப் போக்குவரத்து, வான்வழி எரிபொருள் நிரப்புதல் மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக விமானம் பயன்படுத்தப்படுகிறது.