மத்திய கிழக்கில் பல நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக காஸாவில் நடக்கும் போர் ஏனைய பிராந்தியங்களுக்கும் பரவலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
ஈராக், லெபனான், சிரியா, யேமன் ஆகிய நாடுகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஈரான் மற்றும் நட்பு நாடுகள் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக திரும்பியுள்ளன.
சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர படையின் 5 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.
இஸ்ரேலே இந்த தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகளால் ஈராக்கின் அல் ஆசத் விமானப்படைத் தளத்தில் உள்ள அமெரிக்க படையினரை இலக்கு வைத்து ஏலுகணை தாக்குதல் நடத்தினர்.
இந்த பல அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததுடன் ஈராக்கை சேர்ந்த ஊழியர் கொல்லப்பட்டுள்ளார்.
அதேவேளை யேமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளும் செங்கடலில் தம்மை குறித்து தாக்கியதாகவும் இதனால்,கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.