இன்றைய காலகட்டத்தில் இளவயதிலேயே வழுக்கை விழுதல் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது, இதற்காக பலரும் பலவிதமான பராமரிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு அவர்களது ஜீன்களே காரணம் என கூறினாலும், உடல் சூடு, பொடுகு தொல்லை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை என பலவற்றை குறிப்பிடலாம்.
இந்த பதிவில் பொடுகு பிரச்சனையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
எண்ணெய் மசாஜ்
பொடுகு பிரச்சனையால் முடி கொட்டும் நபர்களுக்கு தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய் வரப்பிரசாதம் ஆகும்.
இதனை கலந்து பயன்படுத்தும் போது, முடி உதிர்தல் தடுக்கப்பட்டு முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
குறிப்பாக வேப்ப எண்ணெய் உச்சந்தலையில் இருக்கும் நுண்ணுயிரிகளிடமிருந்து எந்தவித இடையூறும் இல்லாமல் முடியின் வேர்பகுதியை நன்கு வளரச் செய்கிறது.
மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடியை சேதமடையாமல் பாதுகாக்கின்றன.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
வேப்பெண்ணெய் அரை ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் ஊற்றி கலந்துகொண்டு பஞ்சில் எடுத்து மயிர்கால்களில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
இதனை பில்லர் மூலமாகவோ எடுத்து வேர்கால்களில் நன்றாக படும்படி தடவி மசாஜ் செய்தும் கொள்ளலாம்.
ஒரு மணிநேரம் ஊறியதும் நன்றாக தண்ணீர் ஊற்றி ஸ்கால்பை மசாஜ் செய்து ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து குளித்து விடவும்.