உலக அளவில் உணவுப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து 5ஆவது மாதமாகக் குறைந்துள்ளன.
உக்ரேனிலிருந்து ஏற்றுமதிகள் மீண்டும் தொடங்கியது அதற்கு ஒரு காரணம் என ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உணவு, வேளாண் அமைப்பு தெரிவித்தது.
அந்த அமைப்பு உணவுப் பொருள்களின் அனைத்துலக விலை மாற்றத்தை மாதந்தோறும் கண்காணித்து வருகிறது.
அந்தவகையில் சென்ற மாதம் உணவுப் பொருள்களின் விலை 1.9 விழுக்காடு குறைந்தது.
வட அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் உணவுப் பொருள்களின் உற்பத்தி மேம்பட்டிருப்பதும் அதற்கு ஒரு காரணம் என்று கூறப்பட்டது.
எனினும் உலக அளவில் கோதுமையின் விலை சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் சுமார் 10 விழுக்காடு அதிகம் இருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.