செங்கடலில் ரஷ்ய, சீனக் கப்பல்கள் பாதுகாப்பாகச் சென்றுவரும் என ஹூதி கிளர்ச்சி படையின் மூத்த அதிகாரி முகமது அல்-புக்கைதி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் நாளேடு ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“ரஷ்யா, சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் கப்பல்களுக்கு செங்கடல் வட்டாரத்தில் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை.
மேலும், அந்தக் கப்பல்கள் பாதுகாப்பாக செங்கடலைக் கடப்பதை உறுதிசெய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஏனெனில் தடையற்ற கப்பல் போக்குவரத்து ஏமனுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிக்கிறது.
இருப்பினும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல் தொடரும்.
கப்பல்களைக் கைப்பற்றுவதோ மூழ்கடிப்பதோ எங்கள் இலக்கு அல்ல. இஸ்ரேலின் செலவுகளை அதிகரிக்கச் செய்வதே நோக்கம்.
இந்நடவடிக்கை காஸாவில் போரை நிறுத்த உதவும்” என தெரிவித்தார்