இல்லற வாழ்க்கையில் இணையும் தம்பதியர்கள்இனிமையையும், மன நிம்மதியையும் தக்க வைத்துக்கொள்வதற்கு புரிதல் இருக்க வேண்டும். இல்லையென்றால், ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இருவருக்குமிடைய கருத்து மோதல், வாக்குவாதம் எழக்கூடும்.
அந்த நேரத்தில் சாதுர்யமாக செயல்படாவிட்டால் சின்ன மனஸ்தாபம், கருத்து வேறுபாடு கூட பெரும் சண்டைக்கு அடித்தளம் அமைத்துவிடும். மேலும், கருத்து மோதல் தலைதூக்கும்போது ஒரு சில வார்த்தைகளை உச்சரிப்பதை அறவே தவிர்த்துவிட வேண்டும்.
ஒருவருக்கு சாதாரணமாக தோன்றும் வார்த்தை மற்றொருவருக்கு மன வேதனையை உண்டாக்கக்கூடும். அதனால் தம்பதியர் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது வார்த்தை பிரயோகத்தை கவனமாக கையாள வேண்டும்.
அவர்களை எப்பொழுதும் அடிமையாக வைத்திருக்கு வேண்டும் என நினைக்க கூடாது. அது துணையின் கோபத்தை அதிகரிக்கச் செய்துவிடும். அவருடைய ஆழ்மனதில் அந்த வார்த்தை ஆழமாக பதிந்துவிடும்.
அது ஆறாத மன காயமாக மாறிவிடவும் கூடும். அதனால் தன்னை சார்ந்திருந்து தான் ஆக வேண்டும் என்ற ரீதியில் வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது.
அது ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவும் அமைந்துவிடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. மேலும், எதிர்பாராதவிதமாக நிகழும் தவறுக்கு துணை காரணமாக இருக்கலாம்.
அது அவருக்கு தெரியாம லேயே நடந்திருக்கலாம். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர் முன்கூட்டியே அறியாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் செய்த தவறுக்காக அவர் நிச்சயம் வருத்தப்படுவார். தவறை திருத்துவதற்கு முயற்சி மேற்கொள்வதற்கு பதிலாக திசை திருப்பும் நடவடிக்கையாக மாறிவிடும்.