உற்பத்திப் பொருளாதாரத்தை ஒரே நாளில் கட்டியெழுப்ப முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், அதனை கட்டியெழுப்புவதற்கு முழு நாடும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கல்வி அமைச்சுக்குச் சொந்தமான 19 திறந்தவெளிப் பல்கலைக்கழக வளாகங்களிலும் போதிய இடவசதி உள்ளதுடன், அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பயிர்களை பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மிகவும் குளிரான காலநிலை உள்ள நாடுகளில், பனிப்பொழிவு அற்ற ஆறு மாதங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தொட்டிகளில் செடிகளை வளர்ப்பதில் மக்கள் ஈடுபட்டுள்ளதுடன், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடனுதவியின் கீழ் நாட்டின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் பின்னணியில், அரசாங்கம் மற்றும் நாட்டின் ஏனைய நிறுவனங்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களும் ஏற்படப்போகும் பேரழிவு சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு சரியான முறையில் தயாராக இருக்க வேண்டும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.