செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுற்ப பயன்பாடானது 60 வீத தொழிலை பாதிக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் வருடாந்த உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக வாஷிங்டனில் நடைபெற்ற நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதன் தாக்கம் வளர்முக நாடுகளில் 40 வீதம் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 26 வீத தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுற்பத்தினால் தொழிற்துறைகளில் 50 வீதமானவை எதிர்மறையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் எனவும், எஞ்சியவை மேம்பட்ட உற்பத்தித்திறன் ஆதாயங்களினால் பயனடையக்கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுற்பத்தினால் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கக்கூடும் எனவும், வயதான தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படையக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உற்பத்தித்திறனை பெருமளவில் அதிகரிக்க முடியும் எனவும் ர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.