ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சென்றவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி, கொள்ளையிட்ட பணத்தை நாட்டுக்கு பெற்றுக்கொண்டு அதனை கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு வழங்க போவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொலன்னாவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சியில் இருந்துக்கொண்டு கோப்புகளை காட்டி வீண் பேச்சுகளை பேசாது, ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்திற்கு சென்று நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சென்றவர்கள் யார் என்பதை பெயர்களுடன் நாட்டுக்கு வெளிப்படுத்தி காட்டியது.
இதன் அடுத்த கட்டமாக அடிப்படை உரிமை மனுவை பயன்படுத்தி, பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்துள்ள நபர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.