உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நான்கு நீதியரசர் பதவிகளுக்கு வெற்றிடம் ஏற்பட்டு நீண்டகாலம் சென்றுள்ள நிலையில், இதுவரை அந்த பதவிகளுக்கு தகுதியான எவரும் நியமிக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிவகாரவுக்கு பதிலாக உயர்நீதிமன்ற நீதியரசராக இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.
அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களாக கடமையாற்றிய பிரசாந்த சில்வா,என்.டி.கீர்த்திசிங்க, நீல் இத்தவெல ஆகியோர் ஓய்வுபெற்ற பின்னர், அந்த வெற்றிடங்களுக்கு இதுவரை நீதியரசர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்த பதவிகளுக்கு தகுதியான நபர்களின் பெயர்களை ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைக்க வேண்டும்.
ஜனாதிபதி தனது பரிந்துரையை அனுப்பிய பின்னர், சட்ட ரீதியாக புதிய நியமனங்களை வழங்க முடியும்.
எனினும் ஜனாதிபதி இதுவரை தனது பரிந்துரைகளை அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கவில்லை என தெரியவருகிறது.