மக்கள் விருப்பங்களே அபிவிருத்தி திட்டங்களாக அமைய வேண்டும்

மக்களின் விருப்பங்களின் அடிப்படையிலேயே அபிவிருத்தி திட்டங்கள் அமைய வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்திற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜமொன்றினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார். மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற திணைக்களங்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“என்னைப் பொறுத்த வரையில் மக்களின் விருப்பங்களும் நலன்களுமே முக்கியமானது. எனவே ஒவ்வொரு திட்டங்களினாலும் மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பாக ஆராய்ந்த பின்னரே தீர்மானங்களை முன்னெடுப்பேன்

மன்னார் பகுதியில் குறித்த காற்றாலைகள் அமைக்கப்படுவதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் அமைக்க வேண்டிய அவசியம் தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி தெளிவுபடுத்தியிருந்தார்.

அதன்போது மக்கள் பிரதிநிதிகள் மௌனமாக அமர்ந்திருந்தனர்.

ஜனாதிபதியுடனான புரிந்துணர்விற்கு பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தார்களா அல்லது குறித்த திட்டத்தினை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருந்தார்களா என்பதை அவர்கள்தான் தெளிவுப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin