ஒடிஷா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சகத்தின் மூலம், வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருள்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்ட பாதுகாப்பு வழங்குவதற்காக அவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், ஒடிஷா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியினர் விரும்பி உண்ணும் உணவாக சிவப்பு எறும்பு சட்னி உள்ளது.
இந்த சட்னி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சுறுசுறுப்பை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
சிவப்பு எறும்புகளை பயன்படுத்துவதற்கு முன்பு சுத்தம் செய்யப்பட்டு உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் கலவையை சேர்த்து அரைத்து சட்னியாக தயாரிக்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற பிற கிழக்கு மாநிலங்களிலும் இந்த சட்னியை சாப்பிடுகிறார்கள்.
சிவப்பு எறும்பு சட்னியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
இதில் புரதம், விட்டமின் பி12, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளது.
இந்த சிவப்பு எறும்பு சட்னிக்கு இம்மாதம் 2ஆம் திகதி புவிசார் குறியீடு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.