சர்வதேச நீதிமன்றத்திற்கு இனப் படுகொலையாளிகளை பாரப்படுத்த வேண்டும்! வேலன் சுவாமிகள்

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடத்தப்படுகின்ற பொதுசன வாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடைய முடியும் – தவத்திரு வேலன் சுவாமிகள் வலியுறுத்தல்
வடக்கு – கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடத்தப்படுகின்ற பொதுசன வாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடைய முடியும் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்ட 09 பேரது 50 ஆவது ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு  யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாகவுள்ள நினைவாலயத்தில் நேற்று  நடைபெற்றது.
அஞ்சலி செலுத்திய பின்னர்  ஊடகங்களுக்குக்  கருத்துத் தெரிவிக்கையிலேயே வேலன் சுவாமிகள் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:
தமிழீழமானது தொடர்ச்சியாக இனவழிப்புக்கு உட்பட்டு வருகின்ற காரணத்திலே எங்களது இனத்துக்கு சிங்கள அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை நினைவுகூருவது காலத்தின் தேவையாகக் காணப்படுகின்றது. அனைவரும் ஓரணியாக திரண்டு நினைவேந்தலினை அனுஷ்டிக்க வேண்டும்.
இளம் சந்ததியினர்களிடம் நினைவேந்தலினை கடத்த வேண்டும். இனவழிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற தருணத்தில் 50 ஆவது ஆண்டிலே நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
01.வடக்கு – கிழக்கு தாயகத்தில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் தருணத்தில் வடக்கு –  கிழக்கில் உள்ள இராணுவத்தினர் உடன் வெளியேற்றப்பட வேண்டும்.
02.இனவழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும்.
03.சர்வதேச நீதிமன்றத்திற்கு இனப் படுகொலையாளிகளைப்  பாரப்படுத்த வேண்டும்.
04.ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வடக்கு – கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால்
நடத்தப்படுகின்ற பொதுசன வாக்கெடுப்பின் மூலமாகத்தான் அடைய முடியும் என வேலன் சுவாமிகள் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: S.R.KARAN